விஜய் ஆண்டனியின் கொலை பட நாயகிதான் விஜய்க்கு ஜோடியா? தீயாய் பரவும் தகவல்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (11:57 IST)
நடிகர் விஜய், லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரியங்கா மோகன் மற்றும் சினேகா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நடிகை மீனாட்சி சௌத்ரி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments