Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் படத்தை தயாரிக்கும் மீனா...?

கமல் படத்தை தயாரிக்கும் மீனா...?

கமல் படத்தை தயாரிக்கும் மீனா...?
, செவ்வாய், 24 மே 2016 (10:30 IST)
ரிட்டையர்ட் நடிகைகளின் புகலிடம் தொலைக்காட்சியும், படத்தயாரிப்பும். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான தேவயானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டே தனது கணவரை நாயகனாக்கி படம் தயாரித்தார்.


 


அதேபோல் சிம்ரனும் தயாரிப்பு பணியில் தீவிரமாக உள்ளார். இவர்கள் வரிசையில் மீனாவும் இடம்பிடிக்கிறார்.
 
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ச்சியாக நடித்துவரும் மீனாவின் குழந்தை தெறி படத்தில் அறிமுகமாகி அனைவரது மனங்களையும் அள்ளியது. மீனா மலையாளம், கன்னடத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 
 
தயாரிப்பிலும் அவரது கவனம் திரும்பியுள்ளது.
 
தனது முதல் படத்தில் கமலை நடிக்க வைக்க விரும்பி அவரை மீனா அணுகியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஆர்வத்தோடு அணுகிய லிங்குசாமி நொந்தசாமியான கதை மீனாவுக்கு தெரியாதோ...?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடல் கடக்கும் கடம்பன்