Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ செலவிற்கு மிகவும் கஷ்டப்பட்டதாக கூறிய விஜய் சேதுபதி!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (10:23 IST)
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்னும் அடிப்படையில் “அறம் செய்து பழகு” எனும் திட்டத்தை தொடங்கியது.



இந்த பிரசார திட்டத்தின் தொடக்க விழா மருத்துவமனை தலைவர் குருசங்கர் மற்றும் மருத்துவமனை நோயாளிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா, இயக்குநர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 
விஜய் சேதுபதி தன் தந்தையின் மருத்துவ செலவிற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் தனது அனுபவத்தின் மூலமாக பகிர்ந்து கொண்டார். மேலும் தனது தந்தையின் மருத்துவ செலவிற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் தற்போது மதுரை மிஷன் மருத்துவமனை இது போன்ற இலவச சிகிச்சையை தருவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறினார். பணம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும்போது நோயைக்காட்டிலும் மருத்துவ செலவின் பயமே அதிமாக இருக்கும். 
 
ஆகையால் அந்த பயத்தை போக்கும் வகையில் மதுரை மிஷன் மருத்துவமனை இயங்குவது மிகப்பெரிய விஷயம் என்றும் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments