Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ பாட்டில் வேலைய காட்டிருச்சு..! பூர்ணிமாவுக்கு ஆப்பு வைத்த மாயா!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (13:58 IST)
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுநாள் வரை ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்குள் மோதிக் கொண்டிருந்தனர். தற்போது வெளியேறிய கண்டஸ்டன்ட்கள் மூன்று பேரை வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் மீண்டும் உள்ளே அழைத்து வந்துள்ளனர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் இடையே மோதல் இன்னும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. ஓப்பன் நாமினேஷனாக நடைபெற்ற இதில் பெரும்பாலானோர், தன்னை டைட்டில் வின்னராக சொல்லிக் கொண்டு திரிந்த விக்ரம் சரவணனை டார்கெட் செய்து நாமினேட் செய்துள்ளனர். அவருக்கு அடுத்து அதிகமாக பூர்ணிமா நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூர்ணிமாவின் நெருங்கிய தோழியாக இதுநாள் வரை இருந்து வந்த மாயாவே பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளது ப்ரோமோவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் “இந்த வீட்ல நான் இருக்கணும் இல்ல அவங்க இருக்கணும்” என்று மாயா தடாலடியாக பேசியுள்ளதும் பூர்ணிமா அழுவதும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக பூர்ணிமா – மாயா இணைந்து விளையாடும் கேம் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது. இதுநாள்வரை பூர்ணிமாவுடன் சேர்ந்து கேம் விளையாடிக்கொண்டிருந்த மாயா திடீரென பூர்ணிமாவையே வெளியே அனுப்ப திட்டமிட்டது ஏன் என்று கேள்வி பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அனன்யா மாயாவுக்கு ‘விஷ பாட்டில்’ என்ற பெயரை கொடுத்ததுக்கு ஏற்றார் போல மாயா நடந்து கொண்டிருக்கிறார் என பார்வையாளர்கள் பேச தொடங்கியுள்ளனர். நேற்று வந்த விஜய் வர்மா, அனன்யா இருவரும் மாயா – பூர்ணிமா நட்பு குறித்து வெளியே பேசிக் கொள்ளும் விஷயங்களை அவர்களிடம் சொன்னதால் நேற்றே இருவரும் பிரிந்து விளையாடலாம் என பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாயாவின் இந்த முடிவு பூர்ணிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவுடன் ஜோடி சேரும் சென்சேஷனல் நடிகை… சிம்பு 49 பட அப்டேட்!

ஏன் ‘அசல்’ படத்துக்குப் பிறகு எனக்குத் தமிழில் வாய்ப்பு வரவில்லை எனத் தெரியவில்லை… பாவனா வருத்தம்!

விஷ்ணு விஷால் & அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தால் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸில் மாற்றம்!

சார்பட்டா பரம்பரை 2 தற்போதைக்கு இல்லையாம்.. இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments