இதுதான் ‘மாஸ்டர்’ விஜய்சேதுபதி லுக்? வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (18:59 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை சமூக வலைதளங்களில் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நேற்று வெளியான ‘மாஸ்டர்’ செகண்ட்லுக் சமூக இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் இன்று என்பதால் மாஸ்டர் படத்தின் விஜய்சேதுபதி போஸ்டர் இன்று வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் சற்று முன்னர் ‘மாஸ்டர்’ பட டைட்டிலுடன் விஜய் சேதுபதி போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாக, இதுதான் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி லுக்கா? என கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்
 
ஆனால் இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது இது மாஸ்டர் படக்குழுவினர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட போஸ்டர் அல்ல என்றும் ரசிகர் ஒருவர் ஆர்வத்தில் டிசைன் செய்த போஸ்டர் இது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments