Webdunia - Bharat's app for daily news and videos

Install App

120 ரூவா டிக்கெட் 700 ரூவா.. மாஸ்டர் கொள்ளை! – ரசிகர்கள் புகார்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:00 IST)
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த படம் தற்போது பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை சில வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் பாதியளவு இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் டிக்கெட் விலை அதிகமாக விற்பதாக புகார் எழுந்துள்ளது. சாதாரணமாக 120 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் தற்போது 700 ரூபாய் வரை விற்கப்படுவதாக ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments