விஜய் சொல்லும்வரை ’நோ’ ஷூட்டிங் – சென்னை திரும்பிய மாஸ்டர் படக்குழு!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:31 IST)
விஜய்

வருமான வரி ரெய்டில் சிக்கி விஜய் வீட்டில் இருப்பதால் அவர் நடித்துக் கொண்டிருந்த ஷூட்டிங் பாதியிலேயே நின்று படக்குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம், நடிகர் விஜய்யின் வீடு மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல்  ஒரே நேரத்தில் சுமார் 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. நேற்று முதல் நடைபெற்று வரும் ஏஜிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூபாய் 24 கோடி முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதேபோல தற்போது சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதேபோல விஜய் வீட்டிலும் நேற்று முதல் ரெய்டு நடந்து வருகிறது. இதற்காக விஜய் நேற்று நெய்வேலியில் இருந்து அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் இந்த ரெய்டால் விஜய் சென்னையில் மாட்டிக் கொண்டதால் நெய்வேலி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது விஜய் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவந்த பின் தான் தெரியும் என்பதால் படக்குழு மொத்தமும் சென்னைக்குத் திரும்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அஞ்சான் ரி ரிலீஸில் சிறு மாற்றம்… புது வெர்ஷனைப் பார்த்த பிரபலங்கள்!

எனக்கு அது மட்டும்தான் பிரச்சனை… மதங்கள் குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments