Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மிஸ் செய்வதை சூர்யா பிடிப்பாரா? பரபரப்பு தகவல்

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (19:03 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென தற்போது அந்த திரைப்படம் மே மாதத்துக்கு தள்ளிப் போட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
’மாஸ்டர்’  படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மெதுவாக நடந்து வருவதாகவும் இன்னும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிய இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தயாரிப்பு தரப்புக்கு பொருளாதார சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
எனவே ’மாஸ்டர்’ படம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்துக்கு தள்ளி போக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம், ஒருவேளை ’மாஸ்டர்’ திட்டமிட்டப்படி ஏப்ரல் 9ஆம் தேதியில் வெளிவரவில்லை என்றால் அந்த தேதியில் வெளியிட தற்போது ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து ’மாஸ்டர்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் முதல் படமே பராசக்தி கதை தான்.. விக்ரம் நடிக்க இருந்தார்.. இயக்குனர் வசந்த பாலன்

முடிந்தது பராசக்தி டைட்டில் பிரச்சனை.. இரு தரப்பும் சமூக உடன்பாடு..!

விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரெஜினா!

அடுத்த கட்டுரையில்
Show comments