ரஜினி தனுஷ் பாணியில் விஜய்-சூர்யா: பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (20:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படமும் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படமும் கடந்த பொங்கலன்று ஒரு சில நாட்கள் இடைவெளியில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று தளபதியின் ’மாஸ்டர்’ படமும் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படமும் அதேபோல் ஒரு சில நாட்கள் இடைவெளியில் வெளி வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஏப்ரல் 11 அல்லது 12-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
ரஜினியின் தர்பார் படம் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் ஒரு சில நாட்கள் இடைவெளியில் வெளிவந்து இரண்டு படமும் வெற்றி பெற்றது போலவே விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
 
ஒருவேளை இது நடக்காமல் போனால் சூரரை போற்று திரைப்படம் ஏப்ரல் 16ஆம் தேதி உறுதியாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான ஆடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனின் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments