Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா - நாக சைதன்யா திருமண தேதி அறிவிப்பு!!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (11:26 IST)
நாக சைதன்யா, சமந்தா இருவரின் காதல் உலகமே அறிந்தது. இவர்களின் திருமணம் எப்போது என்று எதிர்பார்த்தற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அவர்களின் திருமண தேதி வெளியாகி உள்ளது.


 
 
அதன்படி அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு 2017 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. முதலில் இந்து முறைப்படியும் அதற்கடுத்து கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்.
 
சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், அவரது பெற்றோர் அந்த முறையிலும் திருமணம் நடக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அதனால்தான் இரு மத முறைப்படியும் திருமணம் நடக்க உள்ளது. 
 
நாக சைதன்யாவின் தம்பி அகிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. ஒரே ஆண்டில் தன் மகன்களின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்க நாகார்ஜு தயாராகி வருகிறார்.   

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்