Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட க்ளைமேக்ஸை மாற்றுகிறாரா மாரி செல்வராஜ்?

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:03 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்ற மாரி செல்வராஜ் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ஒருசில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

லாக்டவுன் முடிந்ததும் படம்பிடிக்கவேண்டிய காட்சிகளில் முக்கியமானது கிளைமேக்ஸ் காட்சியாகும். இதற்காக பிரம்மாண்டமாக பல வீடுகள் கொண்ட செட் ஒன்று போடப்பட்டுள்ளது, கதைப்படி கிளைமேக்ஸில் அந்த குடிசைகள் அனைத்தும் கொளுத்தப்பட்டு 500 க்கும் மேற்பட்ட நடிகர்களைக் கொண்டு படமாக்க இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் லாக்டவுனுக்கு பின்னர் ஷூட்டிங் ஆரம்பித்தாலும் அத்தனைப் பேரை வைத்து படம் பிடிக்க முடியாது என்பதால் அதற்கான மாற்று வழிகளை மாரி செல்வராஜ் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.  சூழ்நிலை சரியாகும் வரை காத்திருந்து எடுக்கலாம் என்றால் அதுவரை அமைக்கப்பட்ட செட்கள் நிலைத்து இருக்காது என்பதால் வேறு என்ன செய்யலாம் எனப் படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments