Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன்லாலின் மெகா பட்ஜெட் மலையாள படம் ரிலீஸ் தள்ளி வைப்பு! ரசிகர்கள் ஏமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:11 IST)
நடிகர் மோகன்லால் மற்றும் பலர் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள மரைக்காயர் எனும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி பெயர் போனது பாலிவுட் சினிமா தான். ஆனால் கடந்த சில நாட்களாக அவர்களையே மிஞ்சும் அளவிற்கு தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் பிரம்மாண்டத்தில் பிரமாண்டமாய் படமியக்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பாகுபலி படத்திற்கு இன்னொரு வரலாற்று சிறப்பிமிக்க திரைப்படம் உருவாகி வருகிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் சென்ற ஆண்டே ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் தேதி குறிப்பிடாமல் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments