Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சுமிட்டாய் - ஒரு முழுமையான விஜய் படம்

Webdunia
சனி, 21 பிப்ரவரி 2015 (16:36 IST)
விஜய் படம் என்றால் நடிகர் விஜய் படமல்ல, விஜய் தொலைக்காட்சி படம். 
 
விஜய் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்து பிரபல ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் சிவ கார்த்திகேயன். அதனால், விஜய் தொலைக்காட்சியில் தோன்றும் நண்டும் சிண்டும் சிவ கார்த்திகேயனைப் போல் ஹீரோவாக முயன்று வருகின்றன. தமிழ் சினிமா அதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு தருவது வேடிக்கை.
 
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் மகாபா ஆனந்த் நடித்திருக்கும் படம், பஞ்சுமிட்டாய். இதன் ஒரு பாடல் மட்டும் நேற்று விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டது. ஆனந்த் நடித்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற திவாகர். இசை நல்லவேளையாக விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கிடையாது, டி.இமான்.
 
விஜய் தொலைக்காட்சியில் காமெடி செய்து இப்போது தமிழ் சினிமாவில் அவ்வப்போது காமெடியனாக தலைகாட்டி வரும் ரோபோ சங்கர் தனது உடல் எடையை குறைத்து ஹீரோவாக நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
 
ஆண்டவா தமிழ் சினிமாவை இந்த விஜய்யிடமிருந்து காப்பாற்று.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments