Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷா குறித்து பேசியதற்காக மன வருத்தம் அடைகிறேன்: மன்சூர் அலிகான் வாக்குமூலம்..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (16:53 IST)
நான் ஜாலியாக தான் பேசினேன், நான் பேசியது த்ரிஷாவுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும் மன வருத்தமடைகிறேன் என மன்சூர் அலிகான் காவல்துறையினர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காவல் நிலையத்தில் ஆஜரானார். 
 
காவல்துறைக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘அந்த வீடியோவில் பேசியது நான்தான், நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன். த்ரிஷா அதை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து நான் பேசவில்லை. நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மனம் வருத்தம் அடைகிறேன். 
 
நான் குரல் பிரச்சினைக்காக நாளை தான் ஆஜராக இருந்தேன். ஆனால் சமூக வலைதளங்களில் நான் தலைமறைவாகி விட்டேன் என்று என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜராகி உள்ளேன். இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது வேண்டுமானாலும் நான் வர தயாராக இருக்கிறேன். இவ்வாறு மன்சூர் அலிகான் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments