Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டி பிக்பாஸ் ஆரம்பிக்கின்றாரா மன்சூர் அலிகான்: பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:35 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஐந்து சீசன்கள் முடிவடைந்து தற்போது ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்க இருப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கலந்து கொண்டால் நான் தான் பிக் பாஸ் ஆக இருப்பேன் என்றும் கூறிய அவர் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்
 
இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள், இந்திய விவசாயிகள் மட்டுமின்றி வெளி நாட்டில் இருந்தும் விவசாயிகள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி விவசாயத்தை விரிவாக்குவது குறித்து பல முக்கிய ஆலோசனை செய்வார்கள் என்றும் வெளிநாட்டில் உள்ள நவீன விவசாய கருவிகளை இந்தியாவுக்கு வரவழைக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிகழ்ச்சியை எந்த ஒரு டிவி ஒளிபரப்ப முன்வந்தாலும் தான் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments