Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி! – ஸ்பாட்டில் இருந்து மன்சூர் அலிகான்?

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (14:50 IST)
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இணைந்துள்ளது குறித்து மன்சூர் அலிகான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

ALSO READ: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது? ஜெயம் ரவி வெளியிட்ட தகவல்!

இந்த படத்தில் தான் நடிப்பதாக உறுதி செய்துள்ள மன்சூர் அலிகான் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். கைதி படமே முதலில் மன்சூட் அலிகானுக்காகதான் எழுதப்பட்டது என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதுபோல விக்ரம் படத்திலும் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ என்ற மன்சூர் அலிகான் பாடலை வைத்திருப்பார்.

தற்போது லோகேஷ் படத்தில் இணைந்துள்ளது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மன்சூர் அலிகான் “என் அன்பு தம்பி லோகேஷ் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி” என தெரிவித்து ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இன்னும் தளபதி 67 பட ஷூட்டிங் ஆரம்பிக்காததால் அது அந்த படத்தில் மன்சூர் அலிகான் கெட்டப்பா என்பது பற்றி தெரியவில்லை. எனினும் அவரது இந்த ட்வீட்டிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி!

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments