Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தினோம்…” இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

vinoth
வெள்ளி, 24 மே 2024 (07:47 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருந்தனர்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 200  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை மஞ்ஞும்மள் பாய்ஸ் நிகழ்த்தியுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன்  எழுதும் கடிதம் பாடலை பயன்படுத்தியது காரணமாக அமைந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையைக் கிளப்பியது. தன்னுடைய பாடலை அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியுள்ளதாகவும், அதை உடனடியாக நீக்கவேண்டும் மற்றும் பாடலை பயன்படுத்தியதற்கான இழப்பீடை வழங்கவேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இப்போது மஞ்சும்மள் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார். அதில் “கண்மணி பாடலை முறையான அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம். இளையராஜாவின் நோட்டீஸ் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments