Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சப்பை இயக்குனர் ராகவனின் 'கடம்பன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (15:03 IST)
மஞ்சைப்பை இயக்குனர் ராகவன் இயக்கத்தில் கதாநாயகன் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கடம்பன்' திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கடம்பன் பழங்குடியினரின் வாழ்க்கைப் பிரச்சனையை மையப்படுத்தி தயாராகியிருக்கிறது. இது முழுக்க பழங்குடியினர் பிரச்சனையை பற்றி மட்டுமே  பேசுகிற படம்.
 
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். வனம் சார்ந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'கடம்பன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த தகவலை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 
தொழிற்சாலைகள் அமைக்க காடுகளை அழித்து, மலைவாழ் மக்களை வெளியேற்றும் சர்வாதிகாரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. யுவன் இசையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது.  பாங்காங்கின் அடர்ந்த அழகிய காட்டுப் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கப்பட்டுள்ளது.
 

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments