Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரூபாய் கூட ஊதியம் இல்லாமல் நடித்து கொடுத்ததற்கு நன்றி: மணிரத்னம்

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:14 IST)
ஒரு ரூபாய் கூட ஊதியம் இல்லாமல் நடித்துக் கொடுத்த நடிகர்கள் இயக்குனர்கள் அனைவருக்கும் தனது நன்றி என மணிரத்னம் அறிக்கை ஒன்றின் மூலம் தான் தெரிவித்துள்ளார்
 
சமீபத்தில் வெளியான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் இயக்கிய இயக்குநர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாருமே ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. இந்த படத்தில் கிடைத்த லாபம் முழுவதுமே பெப்சி தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து மணிரத்னம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஒன்றுகூடி ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தன் நேரத்தையும் உழைப்பையும் நல்கி நவரசத்தை உருவாக்கிய இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி 
 
உங்களுடைய இந்த பேராதரவால் தான் ஆறுமாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பது தாண்டி நம் கலை குடும்பத்தினருக்கு நம் அன்பை அக்கறையை நன்றியை உணர்த்த முடிந்தது. பெருமையில் நன்றி உணர்ச்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்களும், நீங்களும் தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சி இல்லை. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம் என தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments