Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது சரித்திர கனவை டிசம்பரில் தொடங்கும் மணிரத்னம்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:32 IST)
தனது வாழ்நாள் கனவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறார் மணிரத்னம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனக்கென தனி பாணியை கொண்டிருப்பவர் மணிரத்னம். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. கடைசியாக “செக்க சிவந்த வானம்” திரைப்படத்தை முடித்த பின்னர் பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிக, நடிகையரை தேர்வு செய்யும் பணியில் இறங்கினார். பல முக்கியமான நடிகர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதியாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், அமலாபால் உள்ளிட்ட ஒரு நடிக பட்டாளமே ஒப்பந்தமாகி உள்ளனர்.

மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானே இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பழம் தமிழ் எழுத்துக்களை இந்நளைய மக்களுக்கும் புரியும் வகையில் பாடல்வரிகளாக மாற்றி எழுத போவதாக தெரிவித்துள்ளார். சரித்திர கால படம் என்பதால் பாடல்கள் நிறைய இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிந்திருக்கும் நிலையில் ஷூட்டிங் பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments