“அந்த கதாபாத்திரம் அவருக்குதான்… வேறு யாரும் வேண்டாம்” உறுதியாக இருந்த மணிரத்னம்

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (09:30 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 6 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஏற்கனவே ஒருமுறை எடுக்க நினைத்து அது முடியாமல் கிடப்பில் வைத்தார் மணிரத்னம். அதனால் இப்போது மீண்டும் தொடங்கிய போது பல கதாபாத்திரங்களுக்கு முன்பு முடிவு செய்து வைத்திருந்த நடிகர்களை மாற்றினர். ஆனால் நந்தினி கதாபாத்திரத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராய்தான் நடிக்க வேண்டும் என மணிரத்னம் உறுதியாக இருந்தாராம்.  அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்தை அவரால் சிறப்பாக செய்யமுடியும் என மணிரத்னம் நம்பிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments