Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது வாரத்தில் வசூலில் டல்லடிக்கும் லவ்வர்!

vinoth
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (10:28 IST)
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை சொல்லி இருந்தது லவ்வர் திரைப்படம். இந்த படம் இளைஞர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளது.

இதனால் முதல் வாரத்தில் இந்த படம் நல்ல வசூலைப் பெற்றது. ஆனால் இரண்டாவது வாரத்தில் லவ்வர் படத்தின் வசூல் வெகுவாகக் குறைய ஆரம்பித்து விட்டதாம். மற்றொரு புரம் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் வசூலோ இதை விட மோசமாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments