ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

Webdunia
புதன், 16 ஜூலை 2025 (14:03 IST)
உலகம் முழுவதும் படத் தயாரிப்பு முறைகள் தற்போது மாறி வருகின்றன. தயாரிப்பாளர் கிடைக்காத அறிமுக இயக்குனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உதவியால் ‘கிரவுட் பண்டிங்’ மூலமாக சிறிய பட்ஜெட்டில் படங்களை எடுப்பது தற்போது அதிகமாகியுள்ளது. அப்படி எடுத்த லூசியா உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்று பல இளம் இயக்குனர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.

அந்த வகையில் இளம் இயக்குனர் இராம் இந்திரா தனது நண்பர்கள் துணையோடு சிறிய பட்ஜெட்டில் சுயாதீனப் படமாக எடுத்துள்ள ‘மனிதர்கள்’ திரைப்படம் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல முயற்சி என்ற பாராட்டைப் பெற்றாலும் இந்த படம் திரையரங்குகளில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி ஆகியவற்றில் நாளை முதல் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments