Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிரத்னம் படம் - டாட்டா காட்டிய கீர்த்தி சுரேஷ்

மணிரத்னம் படம் - டாட்டா காட்டிய கீர்த்தி சுரேஷ்
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (22:04 IST)
இந்த வருட இறுதியில் தொடங்க வேண்டிய மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போனதால், துல்கர் சல்மான் முதலில் படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதில் நானியை ஒப்பந்தம் செய்தார் மணிரத்னம்.
 
இந்நிலையில், கீர்த்தி சுரேஷும் மணிரத்னம் படத்துக்கு பை சொல்லியிருக்கிறார்.
 

 
கீர்த்தி சுரேஷ் தமிழில், இது என்ன மாயம் படத்தில் ஒப்பந்தமாகி, அப்படம் முடிவதற்குள் நான்கு புதுப்படங்களில் ஒப்பந்தமானார். தமிழின் முன்னணி நடிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் சின்ட்ரோம் பிடித்தாட்டுகிறது. சிவ கார்த்திகேயனின், ரஜினி முருகனில் கீர்த்தி சுரேஷ்தான் நாயகி. சிவ கார்த்திகேயனின் அடுத்தப் படத்திலும் அவரே நாயகி.
 
webdunia

 
இப்படி கீர்த்தி சுரேஷின் காட்டில் பேய் மழை அடிக்கிற காலத்தில் மணிரத்னம் படத்துக்காக மழையை இழக்க அவர் தயாரில்லை. ஸாரி சொல்லி அவரும் படத்திலிருந்து விலக, சையாமி கெர் என்ற நயாக்ராவை கீர்த்திக்குப் பதில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
 
படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் என்னென்ன மாறப் போகிறதோ.

Share this Story:

Follow Webdunia tamil