Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் ஓரின ஈர்ப்பு தமிழ்ப் படத்துக்கு விருது

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (15:05 IST)
ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘என் மகன் மகிழ்வன்’ படத்துக்கு விருது கிடைத்துள்ளது. 
ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து ‘என் மகன் மகிழ்வன்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. லோகேஷ் குமார் இயக்கியுள்ள இந்தப் படம்தான், ஆண் ஓரின  ஈர்ப்பு பற்றி எடுக்கப்பட்ட முதல் முழுநீள தமிழ்ப் படமாகும். ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார், அபிஷேக் ஜோசப், அஸ்வின்ஜித், கிஷோர் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.
 
சென்னை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில்  நடைபெற்ற செகண்ட் இண்டியன் பிலிம் பெஸ்டிவலிலும் இந்தப் படம் திரையிடப்பட்டது. அத்துடன், சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் பெற்றுள்ளது.
 
சுமார் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம், விரைவில் ரிலீஸாக இருக்கிறது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments