Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூளைச்சாவு அடைந்த பிரபல இயக்குனர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (10:42 IST)
மலையாள படமான சூஃபியும் சுஜாதையும் இயக்கிய இயக்குனர் ஷாநவாஸ் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மலையாள சினிமாவில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் ஷாநவாஸ். அதையடுத்து இவர் கரி மற்றும் சூஃபியும் சுஜாதையும் என்ற படத்தை இயக்கினார். கடைசியாக அவர் இயக்கிய அந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றது. இதையடுத்து ஷாநவாஸ் தனது அடுத்த படத்தின் கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவருக்கு கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் கூறிய நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலானது மலையாளத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் "இன்ஃபிளுன்செர்"

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments