Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் பிணமாக பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (12:52 IST)
பிரபல நடிகர் ஒருவர் காரில் பிணமாக இருந்ததை அடுத்து திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ். இவர் ’அய்யப்பனும் ஜோஷியும்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’ஒருமுறை வந்து பார்த்தாயா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் வினோத் தாமஸ் கோட்டயம் அருகே மதுபான பார் ஒன்றின் அருகில் தனது காரை நிறுத்தி உள்ளார். நீண்ட நேரமாக கார் கதவு திறக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கார்க்கதவை தட்டி உள்ளனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால்  உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் கார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே மயக்கம் அடைந்த நிலையில் நடிகர் வினோத் தாமஸ் இருந்தார். இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்த செய்தி அறிந்து மலையாளத் திரை உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments