Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கேமராவுக்கு முன் முகமூடி… பெண்களை வெறுக்கும் நடிகர்கள்”… மாளவிகா மோகனன் ஓபன் டாக்!

vinoth
சனி, 26 ஏப்ரல் 2025 (10:21 IST)
பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் மாளவிகா மோகனன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகமாகினார். அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக விக்ரம்மின் தங்கலான் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்துக்காகக் கடுமையாக உழைத்தும் படம் வணிக ரீதியாக வெற்றிப் பெறாததால் அவரின் உழைப்புக்குப் பலன் கிடைக்கவில்லை. தற்போது பிரபாஸின் ராஜாசாப் மற்றும் மோகன்லாலோடு ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் பெண் வெறுப்பை மேற்கொள்ளும் நடிகர்கள் பற்றிப் பேசியுள்ளார்.

அதில் “கேமராவுக்கு முன்னால் பெண்களை சமமாக நடத்துவதாக, மதிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பெண்னியவாதியாகக் காட்டிக்கொள்ளும் நடிகர்கள், உண்மையில் மிகவும் பிற்போக்குத் தனமான பெண் வெறுப்புக் கொண்டவராக இருக்கிறார்கள். இதை நான் நேரடியாகவேப் பார்த்திருக்கிறேன். அவர்கள் முகமூடியை சரியாக அணிந்து கொண்டு நல்ல பெயர் எடுத்துக் கொள்கிறார்கள். எதற்காக இந்த பாசாங்குத்தனம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஹல்காம் தாக்குதல் இந்து - முஸ்லீம் பிரச்சனை அல்ல: நடிகை காஜல் அகர்வால்..!

‘வடிவேலு அண்ணன் அந்த மாதிரிக் கதாபாத்திரங்கள் எல்லாம் நடிக்கக் கூடாது’… சுந்தர் சி அட்வைஸ்!

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் மலையாள நட்சத்திரப் பட்டாளம்!

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments