சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறேனா?... மாளவிகா மோகனன் பதில்!

vinoth
வியாழன், 30 அக்டோபர் 2025 (13:32 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் கார்த்தி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்தாண்டு தொடங்கி 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பாபி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை மாளவிகா மறுத்துள்ளார். அதில் “நான் பாபி இயக்கும் ‘மெஹா 158’ படத்தில் நான் நடிப்பதாக செய்திகள் உலாவருகின்றன. சிரஞ்சீவி சாருடன் இணைந்து நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறேனா?... மாளவிகா மோகனன் பதில்!

காட்சிகளில் திருப்தி அடையாத யாஷ்… ரி ஷூட்… ரிலீஸ் தேதி மீண்டும் தாமதம்?

லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் கதாநாயகி இவர்தான்..!

சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு படத்தில் இணைந்த சென்சேஷனல் நடிகை!

விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தின் மேல் கதைத் திருட்டு சர்ச்சை… இயக்குனர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments