Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களை ஏமாற்றிய மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்.. வசூல் இவ்வளவுதானா?

vinoth
வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:08 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

அவரின் அடுத்த படமாக மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்ற படத்தை இயக்கி கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திக்கு ஆளாகினர்.

இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தது. இதுவரை படம் வெளியான 5 நாட்களில் 21 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாம். படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது இது மிகவும் மோசமானது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments