Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் கமல்?

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (08:45 IST)
சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பும் முதல் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடித்துள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்து லிஜோ ஜோஸ் இயக்கும் படத்தில் மோகன் லால் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு மலைக்கோட்டை வாலிபன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments