Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன்… அட்டகாசமான முதல் லுக் போஸ்டர்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (09:55 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்ல்லப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் இந்தியன் 2 பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட வேலைகளைக் காரணம் காட்டி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படத்தின் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. மோகன்லால் மீசை தாடியோடு பிரம்மண்டமான வடக்கயிற்றை கொண்டு உடல்பயிற்சி செய்வது போல அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த படம் ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்யாணம் ஆன பொண்ணுக்கு ஏதாவது ஆனா முதல் குற்றவாளி கணவன் தான்: ‘பிளாக்’ டிரைலர்..!

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை பேச்சு: இயக்குனர் மோகன் ஜி மீது இன்னொரு வழக்கு..!

'இந்தியன்’ படத்தில் கமல் ஜோடியாக நடித்த நடிகை விவாகரத்து மனு.. என்ன நடந்தது?

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments