Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடுபிடிக்கும் அருண் விஜய்யின் பாக்ஸர் – மோதப்போகும் வில்லன் யார் தெரியுமா?

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (14:40 IST)
நடிகர் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே நடிக்க இருக்கிறார்.

நடிகர் அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே ஒப்புக்கொண்டுள்ளார். பாக்ஸராக இந்த படத்தில் நடிக்கும் அருண் விஜய்யின் மேனேஜராக மதி நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதற்காக அவர் இப்போது ஆன்லைன் நடிப்புப் பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இயக்குகிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக “இறுதி சுற்று” நாயகி ரித்விகா சிங் நடிக்கிறார். தனது கதாபாத்திரத்துக்காக அருண் விஜய் வியட்நாம் போய் பயிற்சி எடுத்திருக்கிறார் அருண் விஜய். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தன. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments