மகேஷ் பாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஆனா டைட்டில்?

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (15:33 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான சர்காரு வாரிபாட்டா திரைப்படம் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவரின் அடுத்த படம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ராஜமௌலி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கான வேலைகளை ராஜமௌலி தொடங்கிவிட்டார். ஆனால் ஷூட்டிங் தொடங்க எப்படியும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்பதால் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படமாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அமலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இது மகேஷ் பாபுவின் 28 ஆவது படம். இந்த படத்தின் டைட்டிலே இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12  ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே தேதியில் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே திரைப்படம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments