Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கும் குண்டூர் காரம்!

vinoth
சனி, 13 ஜனவரி 2024 (14:48 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீலீலா, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயராம் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்க, இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூல் அதிரிபுதிரியாக அமைந்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் இந்த படம் 45 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம். வார நாளில் இவ்வாளவு பெரிய கலெக்‌ஷனோடு ஓப்பனிங்கை தொடங்கியுள்ள குண்டூர் காரம் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூல் செய்யும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments