Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்ச் டயலாக் எல்லாம் எதிர்பார்த்து வராதீங்க.. விடாமுயற்சி இயக்குனர் மகிழ் எச்சரிக்கை!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (09:01 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்தது. இதையடுத்து அந்த படத்தின் மீதிருந்த சிக்கல்கள் எல்லாம் தீர்க்கப்பட்டு தற்போது  பிப்ரவரி 6 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இயக்குனர் மகிழ் திருமேனி படம் என்ன மாதிரியாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து வருகிறார். அதில் “படத்தில் பன்ச் வசனங்கள் இருக்காது. அதே போல பிரம்மாண்டமான கதாநாயக அறிமுகக் காட்சி இருக்காது. மாஸ் இடைவேளைக் காட்சி இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் அனைவரும் திருப்தியடையும்படி மிகச்சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments