Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விந்தை - வளர்ந்த நட்சத்திரங்களான இரு குழந்தை நட்சத்திரங்கள்

விந்தை - வளர்ந்த நட்சத்திரங்களான இரு குழந்தை நட்சத்திரங்கள்
, வியாழன், 30 அக்டோபர் 2014 (11:50 IST)
மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவானவர். நாட்டாமைப் படத்தில் வைஷ்ணவி கெடுக்கப்பட்டதை ஒரு சிறுவன் பஞ்சாயத்தில் விஜயகுமாரின் முன்னிலையில் சொல்வானே... அதுதான் மகேந்திரன்.
 
சரத்குமாரின் இன்னொரு படமான கம்பீரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மனிஷாஜித். இவர்கள் இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் படம் விந்தை.
 
காதலர்களான மகேந்திரனும், மனிஷாஜித்தும் ஊரைவிட்டு ஓடி சென்னை வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் போலீஸ் அவர்களை அரெஸ்ட் செய்கிறது. காவல்நிலையத்தில் அவர்கள் செலவிடும் 24 மணி நேரத்தை திமில் கலந்த காமெடியுடன் சொல்லும் படம்தான் விந்தை. 
 
வர்மம் படத்தை இயக்கிய லாரா இப்படத்தை இயக்கி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil