Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோம் தல… அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (08:26 IST)
நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு மோடி வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அஜித் அறிக்கை வெளியிட்டார்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் எந்த விதமான அப்டேட்டும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அடிக்கடி படக்குழுவினரை கேட்டு வந்தனர்.

ஆனால் தற்போது சமீப காலமாக பார்க்கும் முக்கிய பிரமுகர்களிடம் கூட வலிமை அப்டேட் கேட்க தொடங்கிவிட்டனர். கிரிக்கெட் மைதானத்தில், அரசியல்வாதிகளின் கூட்டத்தில் என வலிமை அப்டேட் கேட்கப்படுவது வைரலாகி வரும் நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “வலிமை அப்டேட் வெளியிடுவது குறித்து நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவெடுப்போம். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும். எனது ரசிகர்கள் என்ற பெயரில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகளிடம் அப்டேட் கேட்டு சிலர் தொல்லை தருவது என்னை வருத்தமுற செய்கிறது” என கூறியுள்ளார்.

மேலும் “உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு. எனக்கு அது தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம்மை உயர்த்தும்” என கூறியுள்ள அஜித்குமார் பொதுவெளியில் ரசிகர்கள் கண்ணியம், கட்டுபாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் ‘உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு காத்திருக்கிறோம் தலை’ என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments