Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாதவனின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது இவர்கள்தானாம்

மாதவனின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது இவர்கள்தானாம்

மாதவனின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது இவர்கள்தானாம்
, திங்கள், 15 பிப்ரவரி 2016 (11:29 IST)
இறுதிச்சுற்றுப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. படத்தை குறித்து நேர்மறையாக எழுதி மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசுகையில் மாதவனின் நா தழுதழுத்தது.


 


பல வருட அர்ப்பணிப்புடன் உருவாக்கிய படத்தை முதலில் உள்வாங்கி, கைதட்டியவர்களாயிற்றே பத்திரிகையாளர்கள். தனது அடுத்த அடியை இன்னும் கவனமாக வைப்பார் மாதவன் என்பதில் சந்தேகமில்லை. அடுத்து அவர் யார் இயக்கத்தில் 
நடிக்கிறார்?
 
ஓரம்போ, வ படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரியின் இயக்கத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. வழக்கமான கதைத்தடத்திலிருந்து மாறி பயணிப்பவை புஷ்கர் - காயத்ரியின் படங்கள். தமிழில் பெரும்பான்மையினர் அவர்கள் படங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், நியூ ஜெனரேஷன் வகையில் வருபவை அவர்களது ஆக்கங்கள்.
 
புஷ்கர் - காயத்ரி சொன்ன கதை மாதவனுக்குப் பிடித்துள்ளது. விரைவில் மாதவனிடமிருந்து இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil