Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராக்கெட்ரி படத்தை தமிழில் ரிலிஸ் ஆகும் முன்னணி நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:29 IST)
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன்.

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸாக உள்ளதாகவும், அதற்கான பணிகளை மாதவன் மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதே நாளில் கே ஜி எப் 2 திரைப்படத்தின் ரிலிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளதாம். ஆனால் போதுமான அளவுக்கு இன்னும் விளம்பரப் பணிகளை தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments