Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழ் நடிகர்: வைரல் புகைப்படங்கள்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (17:20 IST)
தமிழ் நடிகர் ஒருவர் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 
 
நடிகர் மாதவன் சமீபத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கடந்த சில நாட்களுக்கு முன் நானும் நம்பி நாராயணன் அவர்களும் பிரதமரை நேரில் சந்தித்தோம் என்றும் அப்போது அவரிடம் ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை போட்டு காண்பித்தோம் என்றும் அதனை பார்த்துவிட்டு பிரதமர் மோடி எங்களை பாராட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் பிரதமருடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments