Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் டபுள் ட்ரீட் கொடுக்கும் "மாரி 2"

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (17:22 IST)
தனுஷ் நடிப்பில் குறுகிய காலத்தில் பார்ட் 2-வாக வெளிவர இருக்கும் படம் மாரி 2  இப்படத்தின் முதல் பாகம், எதிர்பார்ப்பில்லாமல் சாதாரண நாளில் வெளிவந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.


 
இதுவரை இன்றைய தலைமுறையில் இப்படி சாதாரண நாளில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை வேறு எந்த முன்னணி நடிகர்களும் பெற்றதில்லை. அதற்கு காரணம் தனுஷின் புதுப்பேட்டைக்குப் பிறகு அவர் நடிக்கும் தாதா கதாபாத்திரம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்திற்க்கு இணையாக காஜல் அகர்வால் ஒரு சராசரி பெண்ணாகவே அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக  மாரி 2  வெளியீட்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். 
 
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே மாரி 2 படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 
 
இந்நிலையில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக மாரி-2, வரும் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இதன் தெலுங்கு ரிலீஸும் அதே 21-ம் தேதி தான் என திடீரென அறிவித்திருக்கிறது படக்குழு. இதனால் மாரி  2-வின் தெலுங்கு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments