Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாநாடு’ டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (11:58 IST)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும் விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இன்று மாலை 03.06 மணிக்கு ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments