விஜய் அஜித் படங்கள் செய்யாததை சாதித்துக் காட்டிய மாநாடு! ஆச்சர்யத்தில் தமிழ் சினிமா!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (10:29 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இதனால் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில ஆச்சர்யப்பட தக்கவிஷயம் என்னவென்றால் இதுவரை இந்திய சினிமாக்களிலேயே அதிக தொகைக்கு ரீமேக் உரிமை விற்கப்பட்ட திரைப்படம் மாநாடுதான் என்று சொல்லப்படுகிறது. விஜய், அஜித் படங்கள் வரிசையாக ரீமேக் செய்யப்படுகின்றன. ஆனால் அவை கூட இந்தளவுக்கு விலை போகவில்லையாம். இது தமிழ் சினிமா உலகினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி அப்படி செய்தது வருத்தமாக இருந்தது… மனநிலை பாதிக்கும் நிலைக்கு சென்றேன் –சேரன் ஆதங்கம்!

கௌரவ ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments