Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமன்னன் ஐரோப்பிய ரிலீஸ் உரிமை.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (09:49 IST)
அரசியலில் இறங்கி அமைச்சர் ஆகிவிட்ட உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் நடந்தது.

படத்தின் சிறப்பான ட்ரைலர் சமூகவலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து 10 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் வெளிநாடு வியாபாரம் இப்போது தொடங்கியுள்ளது.

படத்தின் ஒட்டுமொத்த ஐரோப்பிய வெளியீட்டு உரிமையை அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய்யின் லியோ ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments