Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கிறாரா வித்யா பாலன்?

vinoth
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (08:12 IST)
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய  படங்கள் பெண்களின் பயோபிக்குகளாக வெளியாகி அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் பேன் இந்தியன் தயாரிப்பாக உருவாக்க உள்ளது. இதனால் எம் எஸ் சுப்புலட்சுமியின் உருவத்துக்கு ஒத்துப் போகும் ஒரு தென்னிந்திய நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று எம் எஸ் சுப்புலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை போலவே சேலை மற்றும் மேக்கப் அணிந்து வித்யா பாலன் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் அவர்தான் இந்த பயோபிக்கில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ப்ரதீப் படத்தில் சிவகார்த்திகேயனா?... ‘ட்யூட்’ படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments