Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி பட புரோமோஷனுக்காக வேலை செய்யும் விஜய் ரசிகர்கள்

தோனி பட புரோமோஷனுக்காக வேலை செய்யும் விஜய் ரசிகர்கள்

தோனி பட புரோமோஷனுக்காக வேலை செய்யும் விஜய் ரசிகர்கள்
, திங்கள், 3 அக்டோபர் 2016 (11:32 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


 
 
இப்படம் வெளியான அன்று திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்டுகள், போஸ்டர்கள் என்று அசத்திய  செய்திகள் வெளியானது. தமிழகத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது அனைவரும் தெரிந்ததே. இதன் காரணமாக தமிழகத்தில் விஜய் ரசிகர்களின் ஆதரவால் தோனியின் படம் வெற்றியை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்த போது விஜய் இந்த அணியின் அம்பாசிடராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. அப்போது தோனியும், விஜய்யும் நண்பர்களாகிவிட்டதாகவும், இதனால், தான் தோனி படத்திற்கு விஜய் ரசிகர்கள் புரமோஷன் செய்து வருவதாகவும் கூறிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டன்ட் கலைஞர்களுக்கு விருது வழங்க ஐஸ்வர்யா கோரிக்கை!