Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி & எம் ராஜேஷ் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது?

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (15:45 IST)
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கும் படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை. ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.

இதற்குப் பின்னர் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்துக்காக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்க உள்ளது. மேலும் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments