Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் துணிவு படத்துடன் கைகோர்த்த லைகா… வெளிநாடுகளில் பிரம்மாண்ட ரிலீஸ்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (09:06 IST)
அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர். ஆனால் வாரிசு படத்துக்கான திரையரங்கு ஒப்பந்த வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் அடுத்து நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments