Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி நடிப்பில் ஷங்கரின் எந்திரன் 2 - லைக்கா, ஐங்கரன் தயாரிக்கிறது

ரஜினி நடிப்பில் ஷங்கரின் எந்திரன் 2 - லைக்கா, ஐங்கரன் தயாரிக்கிறது
, வியாழன், 2 ஜூலை 2015 (13:07 IST)
விஜய்யின் கத்தி படத்தை தயாரித்து சர்ச்சையில் சிக்கிய லைக்கா நிறுவனம், ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து எந்திரன் 2 படத்தை தயாரிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். இதன் கதை விவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்து கொண்டார். தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை தயாரிக்க லைகா முன்வந்துள்ளது. அவர்களுடன் ஐங்கரனும் கைகோர்த்துள்ளது. படத்தின் பட்ஜெட் 150 கோடிகளை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
படத்தில் வில்லனாக பிரபலமான ஹீரோவை நடிக்க வைக்க ஷங்கர் விரும்புகிறார். கமல் முதல் அர்னால்டுவரை பல பெயர்கள் அடிபட்டன. ஆனால், இன்னும் வில்லன் யார் என்பது முடிவாகவில்லை.
 
2016 -இல் எந்திரன் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது. எந்திரனுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு, இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil